பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஞான்ச்ம்பந்தர் களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்கொச்சை கழுமல மென்றின்ன இளங்குமரன் றன்னைப் பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவனுரே. (1) என்பது இதன் முதற் பாடல். இதன் இறுதியில் வைத்து எண்ணப் பெற்ற "கழுமலம்' என்பது இரண்டாம் பாடலின் முதலிலும்; இரண்டாம் பாடலின் இறுதியிலுள்ள தோணி புரம் மூன்றாம் பாடலின் முதலிலும், மூன்றாம் பாடலின் இறுதியிலுள்ள வெங்குரு நான்காம் பாடலின் முதலிலும்; தான்காம் பாடலின் இறுதியிலுள்ள சண்பை ஐந்தாம் பாடலின் தொடக்கத்திலும், ஐந்தாம் பாடலின் இறுதி விலுள்ள புறவம் ஆறாம் பாடலின் முதலிலும்; ஆறாம் பாடலின் இறுதியிலுள்ள அயனுார் ஏழாம் பாடலின் முதலிலும்; ஏழாம் பாடலின் இறுதியிலுள்ள புறவம்' எட்டாம் பாடலின் முதலிலும்; எட்டாம் பாடலின் இறுதியிலுள்ள தோணிபுரம் ஒன்பதாம் பாடலின் தொடக்கத்திலும்; ஒன்பதாம் பாடலின் இறுதியிலுள்ள் கழுமலம்' பத்தாம் பாடலின் தொடக்கத்திலும்; பத்தாம் பாடலின் இறுதியிலுள்ள சண்டை பதினோராந்: திருப்பாடலின் முதலிலும், பதினோராம் பாடலின் இறுதி விலுள்ள வெங்குருவாகிய தருமனுரர் பன்னிரண்டாம் பாடலின் இறுதியிலுள்ள அயனூர்' என்னும் பிரமபுரம் *பிரமபுரம் என்ற முதற் பாடலிலும் இயைந்து நின்று. பொருட்டொடர்பு பற்றிய அந்தாதியாக மண்டலித்து முடிந்திருத்தல் காணலாம். இங்ஙனம் இத்திருப்பதிகத்திலுள்ள பன்னிரு திருப் பாடல்களும் சீகாழிப் பதிக்குரிய பன்னிரு திருப்பெயர் களில் முன்னும் பின்னுமுள்ள பாடல்களுடன் அமைந்து ஒரு வட்டமாக அமைந்து செல்லுதலால் இப்பதிகம் *சக்கரம் எனப் பெயர் பெற்றது. இப்பெயர் பிள்ளை யாராலேயே இடப்பெற்றதென்பது அயனூர்மேல் இச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/113&oldid=855953" இலிருந்து மீள்விக்கப்பட்டது