பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமல நிகழ்ச்சிகள் 67 (1. 19) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். இதில், பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனனுடை பவனிறை இறையணி வளையினை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகை கறையணி பொழினிறை வயலணி கழுமல மமர்கன லுருவினன் கறையணி மலர்(கறு விரையுல்கு நலமலி கழல்தொழன் மருவுமே. (i) என்பது முதற் பாடல். இதில் குற்றெழுத்துகள் மிகுதியாகப் பயின்று முடுகியவாக அமைவதைக் காணலாம். ஆகவே, இது முடுகியல் திருவிராகத் திருப்பாடலாக அமைந் திருத்தல் காணலாம். முதல் திருமுறையில் 19 முதல் 22 வரையும், 120 முதல் 125 வரையும்; இரண்டாம் திருமுறையில் 29 முதல் 84 வரையுள்ள பதிகங்களும், 97, 98, 100, 101 ஆம் பதிகங்களும்; மூன்றாம் திருமுறையில் 52, 53 பதிகங்களும், 67 முதல் 88 வரையுள்ள பதிகங் களும் முடுகியலாகிய திருவிராகத் திருப்பாடல்களாக அமைந்துள்ளன. இப்பதிகம் (1.19) கழுமலம் பற்றியது. சக்கர மாற்று : பிள்ளையாரின் இரண்டாந் திரு முறையில் பிரமனுர் வேணுபுரம் (2.70), விளங்கிய சீர்" (2.73) என்ற முதற் குறிப்புகளையுடைய இரண்டு திருப் பதிகங்கள் சக்கரமாற்று" என்னும் மிறைக்கவிக்கு இலக்கியமாக அமைகின்றன. இவற்றுள் விளங்கிய சீர். என்ற பதிகம் பிரமபுரம்மேல் எழுந்தது. விளங்கிய சீர்ப் பிரமனுர் வேணுபுரம் புகலிவெங்குரு மேற்சோலை வளங்கவருங் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண் புறவமண்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/112&oldid=855952" இலிருந்து மீள்விக்கப்பட்டது