பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 33. விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்; சடையிற் கங்கை தரித்தவர்; படைகொள் வெண்மழு வானர் பராய்த்துறை அடைய நின்ற அடிகளே. (7). என்பது ஏழாவது திருப்பாடல், திருப்பராய்த்துறை ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு :எழுதிரு வாலந் துறை திருச்செந்துறையே முதலா, வழுவில் பல கோயில்கள் சென்று வணங்கி" (ஞானசம்பந். 342) என்ற தொடரால் திருவாலந்துறை, திருச்செந்துறைத் தலங்கட்கு வந்ததாகச் சேக்கிழார் குறிப்பிடுவர். ஆலந்துறை என்பது புள்ள மங்கை ஆலந். துறை'. இது தஞ்சைக் கருகிலுள்ள பசுபதி கோயில் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து இ கல் தொலைவு. (பதிகம் இல்லை). இதன் பிறகு கற்குடி மலை வந்ததாகச் சேக்கிழார் இதே பாடலில் குறிப்பிடுகின்றார். வழி யிலுள்ள பல தலங்களை ஒதுக்கிவிட்டு ஆலந்துறைக்கு ஏன் சென்றார் என்பதைத் தெரிந்துகொள்ள இயல வில்லை. சேக்கிழார் தவறாகக் குறிப்பீட்டு விட்டாரோ என்று துணியவும் முடியவில்லை. இஃது ஆராய்தற்குரியது. கற்குடி' க்குச் சம்பந்தருடன் வருவோம். வடந்திகழ் மென்முலையாள் (1.43) என்ற திருப்பதிகம்பாடி இறை வனை ஏத்துகின்றார். இதில், கிருஷ்ண தபோவனம், விவேகாநந்த வித்யாவனம் மேல் நிலைப்பள்ளி நன்கு இயங்கி வருகின்றன. அடிகளாரின் கல்வித் தொண்டு பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்கது. - 39. கற்குடி (உய்யக் கொண்டான் மலை): திருச்சி டவுன் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. சிறிய மலைமேல் கோயில் உள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/136&oldid=855978" இலிருந்து மீள்விக்கப்பட்டது