பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“懿 - ஞானசம்பந்தர் என்பது நான்காவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர். (இங்கிருந்து கொங்கு நாட்டுத் தல வழிபாடு தொடங்கு கின்றது. திருச்செங்கோட்டில் தொடங்கி கருவூர்த் திருவானிலையைச் சேவித்தலுடன் நிறைவு பெறுகின்றது தலங்கள்).* - கருவூர்த் திருவானிலை இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு வாட்போக்கி (மாணிக்கமலை) என்ற திருத்தலத் திற்கு வருகின்றார். இறைவனைச் சேவிக்கின்றார் (பதிகம் இல்லை). சேக்கிழாரின் மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து (ஞானசம்பந்தர் 339) என்ற தொடரால் பிள்ளையார் இத்தலத்திற்கு வந்தது உறுதி பாகின்றது. மாணிக்க மலையானிடம் விடை பெற்றுக் கொண்டு திருப்பராய்த்துறை வருகின்றார். கீறு சேர்வதோர் (1.135) என். முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். 35. இந்நூல் - 8வது கட்டுரை காண்க. 35. வாட்போக்கி (இரத்தினகிரி): குழித்தலை இருப் பூர்தி நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. உயர்ந்த மலை: கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரமுள்ளது {952 படிகள்). காலையில் கடம்பந்துறை, கட்டுச்சியில் இத்தலம், மாலையில் ஈய்ங்கோய் மலை ஆகிய மூன்றையும் கார்த்திகை சோம வாரங்களில் இந்நாட்டு மக்கள் தரிசிப்பதுண்டு. அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற தலம், 37. பராய்த்துறை (திருப்பளாத்துறை): திருப்பராய்த் துறை ரோட் இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. நடையிலேயே திருக்கோயில் செல்லலாம். அகண்ட காவிரிக் கரையிலுள்ள தலம். திருச்சி - கரூர் சாலையில் பேருந்துமூலம் வந்தால் கோயிலருகிலேயே இறங்கலாம். சித்பவானந்த அடிகள் நிறுவிய இராம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/135&oldid=855977" இலிருந்து மீள்விக்கப்பட்டது