பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் Gi: திற்கு வருகின்றார். ஆரிடம் பாடிலர் (3.14) என்ற திருப்பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். இதில், விழியிலா க்குதலை விளங்கி ளம்பிறை . சுழியிலார் வருபுனல் சூழல் தாங்கினான் பழியிலார் பரவு பைஞ்ஞ்லி பாடலான் - கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே. (5): என்பது ஐந்தாம் பாடல். பைஞ்ஞ்லி பரமனிடம் விடை பெற்றுக் கொண்டு திருஈய்ங்கோய் மலை" வருகின்றார். வானத் துயர் தண் (1.70) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலை தொடுத்து ஈய்ங்கோய் மலையானை வழிபடுகின்றார். மறையின் இசையார் நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும் குறைவெண் பிறையும் புனலும் நிலவும் குளிர்புன் சடைதாழப் பறையும் குழலும் கழலும் ஆர்ப்பப் படுகாட் டெரியாடும் இறைவர் சிறைவண் டறையூஞ் சாரல் ஈய்ங்கோய் மலையாரே. (4). 34. ஈய்ங்கோய் மலை (திருவிங்கநாதர் மலை): குழித் தலை என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு (ஆற்றைக் கடக்க வேண்டும்; இப்போது பாலம் உள்ளது). திருச்சி. சேலம் நெடுஞ்சாலையில் முசிறிக்கு மேற்கே 2 இல் தொலைவு. அகத்திய முனிவர் ஈ உருவங் கொண்டு பூசித்த தலம். காலையில் கடம் பந்துறை, கட்டுச்சியில் வாட்போக்கி, மாலையில் இத்தலம் ஆகிய மூன்றையும் கார்த்திகை சோம வாரங்களில் சேவிப்பது இந்நாட்டு மக்களின் புண்ணியச் செயல். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். இத் தலத்து இறைவன்மீது நக்கீர தேவ நாயனார் திருவீய்ங். கோய் மலை எழுபது என்ற பிரபந்தம் பாடியுள்ளார். (பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பெற்றுள்ளது).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/134&oldid=855976" இலிருந்து மீள்விக்கப்பட்டது