பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் §§ என்பது மாலையின் ஆறாவது வாடாமலர். இஃது அகத் துறையில் அமைந்த திருப்பதிகம்; மகள் பாசுரம். நாயகி நிலையில் இருந்து பேசுகின்றார் பிள்ளையார். தன்னை மயக்கி ஆட்கொண்ட நிலையை விளக்குகின்றார். மூக்கீச்சரத் தடிகளிடம் விடை பெற்றுக் கொண்டு திருச்சிராப்பள்ளி' வருகின்றார், "கன்னுடையானை {1.98) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி கிராப்பள்ளிக் குன்றுடையானை வழிபடுகின்றார். நன்றுடை யானைத் தீயதிலானை கரைவெள்ளே(று) ஒன்றுடை யானை யுமையொரு பாகம் உடையானைச் 41. சிராப்பள்ளி (திரிசிராப்பள்ளி). திருச்சி டவுன் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. திரிசிரன் என்ற அரக்கன் வழிபட்டதாலும், ஆதிசேடனுக்கும் வாயு தேவனுக்கும் ஏற்பட்ட சச்சரவில் வாயு திருக்கயிலாயத்தி விருந்து தூக்கியெறிந்த மூன்று சிகரங்களுள் ஒரு சிகரம் இங்கு வந்து மலையாயினமையாலும் தலப்பெயர் ஏற்பட்ட தென்பது புராண வரலாறு. காளத்தி, சிராப்பள்ளி, திருக்கோணமலை ஆகிய மூன்றும் இதுபற்றித் தென் கயிலை எனப்படும். மலையின் உயரம் 273 அடி, ஏறுவதற்கு 417 அழகான படிகள் உண்டு. மலையின்மேல் இருப்பது உச்சிப் பிள்ளையார் கோயில், சற்றுக் கீழ் இருப்பது தாயுமானவர் கோயில். தாயுமான அடிகளின் வரலாற்றுத் தொடர்புடையது. உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் மகேந்திரப் பல்லவன் எடுப்பித்த குகைக் கோயில் உண்டு. மலை வலம் வரும் வழியிலும் ஒரு குகைக் கோயில் உண்டு. தாயுமான அடிகட்கு உபதேசம் செய்த மெளன குரு இருந்த திருமடம் கோயிலுக்குச் செல்லும் படித்துறையில் உள்ளது. செவ்வந்திப் புராணம் என்ற பெயருடைய தலபுராணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/138&oldid=855980" இலிருந்து மீள்விக்கப்பட்டது