பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசம்பந்தர் சென்றடை யாத ساهة فهزة تزي யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூற என் உன்னம் குளிரும்மே. (í } என்பது இப்பதிகத்தின் முதல் பாடல். இராப்பள்ளிக் குன்றுடையானிடம் விடை பெற்றுக் கொண்டு திருஆனைக்கா" வருகினறார். மூன்று திருப் பதிகங்களால் வழிபடுகின்றார். மேழையார் மிடறா’ (2:23). என்ற முதற்குறிப்புடையது ஒரு பதிகம். - 42. ஆனைக்கா (ஜம்புகேஸ்வரம்): சீரங்கம் இருப் பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. திருச்சியி விருந்து நகரப்பேருத்து வசதியுண்டு. பஞ்சபூதங்களுள் இது நீர் அல்லது அப்புத்தலம். காவிரி, கொள்ளிடம் என்ற இரு ஆறுகளும் தெற்கிலும், வடக்கிலும் ஒட, இவ்விரண்டாறுகட்கும் இடைப்பட்ட தீவிலுள்ளது இத் தலம். மூலத்தான மூர்த்தியிருக்கும் இடம் ஆறுகளின் தரைமட்டத்திற்குக் கீழிருப்பதால் எப்போதும் நீர்க் கசிவு இருக்கும். ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஓயாமல் நீரை இறைத்துக் கொண்டே இருக்கவேண்டும். சிலந்தியும் ஆனையும் பூசித்த தலம். உமாதேவியார் பூசித்த தலங்களுள் ஒன்று. நாள்தோறும் அம்மன் கோயில் அருச்சகர் உச்சிக் கால பூசைவேளையில் பெண்ணுடையில் சுவாமி கோயிலில் வழிபாடு செய்கின்றார். பெருவிழாவில் பங்குனி மாதம் சித்திரை நடசத்திரத்தன்று பஞ்சப் பிராகார உற்சவம் மிகுபுகழ் பெற்றது. சோமாஸ்கந்தர் அம்மன் வேடமும், அம்மன் சுவாமி வேடமும் பூண்டு ஐந்து. வீதிகளிலும் வலம் வருவார்கள். அம்பிகை அகிலாண் டேசுவரியின் திருவுருவம் அழகும் அருளும் நிரம்பியது. கச்சியப்ப முனிவர் இயற்றிய தல புராணம் இத்தலத்துக்கு உண்டு. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/139&oldid=855981" இலிருந்து மீள்விக்கப்பட்டது