பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் ஒ1 செங்கட் பெயர்கொண்டவன் செம்பியூர்கோன் அங்கட் கருணை பெரிதாயவனே வெங்கண் விடையாய் எம்வெண் காவலுளாய் அங்கத் தயர்வாயினள் ஆயிழைவே. (5) என்பது இதன் ஐந்தாவது பாடல். மற்றொரு பதிகம் வானைக்காவில் (3:53) என்ற முதற் குறிப்புடையது. இதில், நானுமோர்வு சார்வு முன் நகையுமுட்கு கன்மையும் பேணுறாத செல்வமும் பேசகின்ற பெற்றியான் ஆணும்பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் காணும்கண்ணும் மூன்றுடைக் கறைகொள் மிடறன் அல்லனே. (6) என்பது ஆறாவது பாடல். அடுத்து ஆனைக்காவில் திருக்கயிலாயம், ஆனைக்கா, திருமயேந்திரம், திருவாரூர் ஆகிய நான்கு தலங்களையும் தனித்தனியே வழிபாடு செய்யும் முறையில் அமையும்ாறு பாடியுள்ள பதிகம் (3-109) கூடற்சதுக்கமாக அமைந் துள்ளது.* - 3. கூடற்சதுக்கம்: நான்கு தெருக்கள் கூடும் இடம் சதுக்கம். இங்கு நான்கு தலங்கள் ஒன்று கூடிய நிலையில் அந்நான்கு தலங்களிலும் கோயில் கொண்டிருக்கும் பெருமான்களைப் பரவிப் போற்றுவதாக அமைந்துள்ளது காண்க. இவை நான்கும் ஒரே பாடலில் கூடற்சதுக்கம் போன்று அமைந்திருத்தலால் இப்பதிகம் கூடற் சதுக்கம்" என்ற பெயர் பெறுகின்றது. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/140&oldid=855983" இலிருந்து மீள்விக்கப்பட்டது