பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ஞானசம்பந்தர் மாலயன் தேடிய மயேந்திரரும் காலனை உயிர்கொண்ட கயிலையாரும் வேலைய தோங்கும் வெண்ணாவலாரும் ஆலையா ரூராதி யானைக்காவே. (3} என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல். இதில் மயேந்திரம், கயிலை, ஆரூர், ஆனைக்கா ஆகிய நான்கு தலங்களும் கூடியமைந்து கூடற்சதுக்க மாகியிருத்தலைக் காணலாம். சிலநாட்கள் ஆனைக்காவில் தங்குகின்றார். ஆனைக்கா அம்மானிடம் விடை பெற்றுக் கொண்டு தவத்துறை வருகின்றார். தலத்திறைவனை வழிபடு கின்றார் (பதிகம் இல்லை). திருத்தவத்துறை இறைவ விடம் விடை பெற்றுக் கொண்டு பாற்றுறை என்ற தலத்திற்கு வருகின்றார். காரணர் கொன்றை (1.56) என்ற முதற்குறிப்பையுடைய திருப்பதிகத்தால் வழிபடுகின்றார். மாகக் தோய்மதி குடி மகிழ்க்தென தாகம் பொன்னிற மாக்கினார் பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை காகம் பூண்ட கயவரே. - (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். இப்பதிகம் :மகள் பாசுரமாக அமைந்துள்ளது. பாற்றுறைப் பரமன் மீது காதல் கொண்ட சம்பந்தர் நாயகி நாயகி நிலையி 44. தவத்துறை (திருத்தவத்துறை): இலால்குடி இருப்பூர்தி நிலையத்திலிருந்து மிக அண்மையில் உள்ளது. இது வைப்புத்தலம். பண்டெழுவர் தவத்துறை (அப்பர் 5.71:1) என்பது அப்பர் தேவாரம், பெ. பு. ஞானசம் பந்தர் 347 பாடலால் இங்கு வந்தது உறுதிப்படுகின்றது. 45. பாற்றுறை: விழுப்புரம் - திருச்சி இருப்பூர்திப் பாதையில் சீரங்கம் நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/141&oldid=855984" இலிருந்து மீள்விக்கப்பட்டது