பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 99 விருக்கும் சம்பந்தர்) தன் மேனியைப் பொன்னிற மாக்கினார் (பசலை நிறம் அடையச் செய்தார்) என்கின்றார். பாற்றுறை ஈசரிடம் விடை பெற்றுக் கொண்டு எறும்பியூர் வருகின்றார். இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). எறும் பியூர் எம்பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு நெடுங்களம் வருகின்றார். மறை அடையாய் (1.52) என்ற முதற் குறிப்புடைய பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். இதில், விருத்த னாகிப் பால னாகி வேதமோர் கான்குணர்ந்து கருத்த னாகிக் கங்கை யானைக் கமழ்சடை மேற்கரந்தாய் அருத்த னாய ஆதி தேவ னடியினை பேபரவும் கிருத்தர் கீத ரிடர்க ளையாய் - நெடுங்கள மேயவனே. (6) என்பது ஆறாவது பாடல். நெடுங்கள மேயவனிடம் விடை பெற்றுக் கொண்டு இயமம் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். கியமம் 46. எறும்பியூர் (திருவெறும்பூர்): தஞ்சை, திருச்சி இருப்பூர்தி வழியில் திருவெறும் பூர் நிலையத்திலிருந்து கல் தொலைவு. எறும்பு வழிபட்ட தலம். கோயில் சிறு குன்றின் மேலுள்ளது. அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 47. நெடுங்களம்: தஞ்சை - திருச்சி இருப்பூர்தி வழியில் சோழகம்பட்டி என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 48. நியமம்: திருக்காட்டுப் பள்ளியை யடுத்து நேமம் என வழங்கும் ஊராதல் கூடும். சோற்றுத்துறை நியமம் துருத்தியும் (அப்பர் 6:13:4) என்பது காண்க. இது வைப்புத்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/142&oldid=855985" இலிருந்து மீள்விக்கப்பட்டது