பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{ ஞானசம்பந்தர் போற்றி (ஞானசம்பந்தர். 349) என்ற தொடரால் இங்கு வந்தது உறுதியாகின்றது. இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). நியமத்து இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு மேலைத் திருக்காட்டுப் பள்ளி* வருகின்றார். வாருமன்னு மூலை 3:29) என்ற முதற் குறிப்புடைய திருப் பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். வரை யுனைம் சத்தொடு வந்திழி காவிரிக் கரை புலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித் திரை புலாங் கங்கையுந் திங்களும் சூடியங் கரை புலாங் கோவணத் தடிகள்வே டங்களே. (5) என்பது ஐக்தாவது பாடல். இருகாட்டுப்பள்ளி ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு கடைமுடி’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர் 'அருத்தனை அறவனை (11:1) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி கடைமுடி இறைவனை ஏத்துகின்றார். படவரவே ரல்குல் பல்வளைக்கை கடவரலானை யோர்பாகம் வைத்துக் குடதிசை மதியது சூடுசென்னிக் கடவுள்தன் வளங்கர் கடைமுடியே. (6) என்பது ஆறாவது திருப்பாடல். கடைமுடி இறைவனிடம் விடை பெற்றுக்கொண்டு திருவலம்பொழில் என்ற திருத்தலத்தையடைகின்றார். 49. காட்டுப்பள்ளி (மேலை) : திருக்காட்டுப் பள்ளி, பூதலூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. பேருந்து வழியிலுள்ளது. 50. கடைமுடி (கீழுர்) : செம்பொனார் கோயில் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலுமே பெற்ற தலம். 51. ஆலம்பொழில்: தஞ்சையிலிருந்து 7 கல் தொலைவு. சப்தஸ்தானங்களுள் ஒன்றாகிய திருப்பூந்துருத்தியிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/143&oldid=855986" இலிருந்து மீள்விக்கப்பட்டது