பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் füß இத்தலத்து இறைவனை வணங்கி விட்டு, (பதிகம் இல்லை) அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பூந்துருத்தி வரு கின்றார். இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் பாட வில்லை). அடுத்து, கண்டியூர்' வருகின்றார். இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் பாடவில்லை). பூந்துருத்தி யிலிருந்து கண் டி யூர் வருகின்றார். வினவினேன் அறியாமையில் (3.38) என்ற முதற் குறிப்புடைய செந் 1 கல் தொலைவு. அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். 52. பூந்துருத்தி (திருப்பூந்துருத்தி): தஞ்சையிலிருந்து 8 கல் தொலைவு, சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பர் சுவாமிகள் இங்குத் திருமடம் அமைத்துப் பல பொதுப் பதிகங்கள் அருளினார். அத்திருமடச் சிதைவு இன்றும் உள்ளது. பாண்டிநாட்டில் சைவம் பரப்பித் திரும்பும் வழியில் சம்பந்தர் அப்பர் பெருமானைக் காண இத்திருத்தலத்தருகில் வரும்போது, ஒருவரும் காணாதபடி, முத்துச் சிவிகையைத் தாங்கும் தொண்டர்களோடு அப்பர் உள் நுழைந்து தாங்கி வந்தனர். இதையறிந்தவுடன் சம்பந்தர் கீழ் இழிந்து ஒருவரையொருவர் வணங்கி அளவளாவினர். அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். - 53. கண்டியூர் வீரட்டம் : தஞ்சையிலிருந்து திருவை யாறு செல்லும் பேருந்து வழியில் 6 கல் தொலைவு. ஆதி காலத்தில் ஐம்முகச் சிவனாரைப்போல் பிரமனுக்கு ஐந்து தலைகள் இருந்தபடியால் பிரமன் சமத்துவம் கொண் டாடிச் செருக்குற்றனன். பற்பல உயிர்கட்குத் துன்பமும் விளைவித்தனன், தேவர்களின் வேண்டுகோட்கிரங்கி அவனது ஐந்தாவது தலையைக் கண்டித்தெறிந்தமையால் கண்டியூர் வீரட்டமாயிற்று. சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. காவிரிக் கரையிலுள்ள தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/144&oldid=855987" இலிருந்து மீள்விக்கப்பட்டது