பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுத் தலவழிபாடு 113 நாகமும் திங்களும் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப் பாகமு கந்தவர் தாழம் பாண்டிக் கொடுமுடியாரே {5} என்பது ஐந்தாவது பாடல். கொடுமுடியிலிருந்து வெஞ்சமாக் கூடல் வருகின்றார்; இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). தலத்து இறைவனை வழிபட்டுக் கொண்டு கருவூர்த் திருவானிலை' க்கு வருகின்றார். தொண்டெலா மலர் (228) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். இதில்: தேவர் திங்களும் பாம்பும் சென்னியில் மேவர் மும்மதி லெய்த வில்லியர் காவலர் கருவூ ருளாகிலை மூவ ராகிய மொய்ம்ப சல்லரே. {6}

என்பது ஆறாவது திருப்பாடல். கருவூர் ஆனிலை வழிபாட்டுடன் கொங்கு நாட்டுத் தலவழிபாடு நிறைவு பெறுகின்றது. பின்னர்ச் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் தொடருகின்றது. திருப் பராய்த் துறைக்கு வருகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், - 5. வெஞ்சமாக்கூடல்: கரூரிலிருந்து 15கல் தொலைவு. சுந்தரர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 5. கருவூர் ஆனிலை: கரூர் இருப்பூர்தி நிலையத்தி விருந்து கல் தொலைவு. எறிபத்தர், புகழ்ச்சோழர், கருவூர்த் தேவர் (9-ஆம் திருமுறை) முதலியோர் வரலாறுகள் விளங்கும் தலம். காமதேது பூசித்தமையால் கோயிலின் பெயர் ஆன் நிலை, ஆனிலை ஆயிற்று, சம்பந்தர் பாடல் மட்டும் பெற்ற தலம். - .* . ( : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/156&oldid=856000" இலிருந்து மீள்விக்கப்பட்டது