பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##2 ஞானசம்பந்தt அதிகமாக இருந்தது. வெள்ளை வேட்டிக்காரர்கள்’ அங்கொருவர் இங்கொருவருமாக இருந்தனர். கணேசன் "என்ன ரெட்டியார், அநாகரிகமான கூட்டமாக இருக் கின்றதே" என்றார். செட்டிநாட்டு நிலையை ஒப்பிட்ட தால் ஏற்பட்ட பேச்சு என்பதை அறிந்தேன். ஆம் ஐயா, உழைப்பாளர்கள் தோற்றத்தில் அப்படித்தான் தென்படுவார்கள். அவர்கள் முகத்தைப் பாருங்கள். உழைப்பையெல்லாம் மறந்து இன்றுதான் ஆனந்தமாக இருக்கிறார்கள்" என்றேன். உண்மைதான்; ساسانه லுழைப்பைப் பார்க்காதவர்கள் நாம். நீங்கள் கூறுவது முக்காலும் உண்மை,' என்று என் மறுமொழியை ஆமோதித்தார். அக் கூ ட் ட த் தி ல் சிற்றுண்டியோ, காஃபியோ கொள்வதற்கும் மனம் இல்லை. ஏதோ குளிர்பானம் பருகி ஈரோடு வந்து சேர்ந்தோம்; அன்றிரவே திருச்சி வழியாகக் காரைக்குடி திரும்பினோம். ராஜத்தோடு வந்தவர்கள் ஈரோட்டிலிருந்த வண்ணம் சென்னை திரும்பிவிட்டனர். ஞானசம்பந்தப் பெருமான் திருச்செங்கோட்டிலிருந்து திருப்பாண்டிக் கொடுமுடிக்கு (கறையூர்) வருகின்றார். பெண்ணமர் மேனியினாரும் (2:69) என்ற திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகிறார். இதில், போகமும் இன்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும் 4. பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி): திருச்சி.ஈரோடு இருப்பூர்திப் பாதையில் உள்ள கொடு முடி என்ற நிலையத் திலிருந்து கல் தெலைவு. அகண்ட காவிரிக்கரையிலுள்ளது. இசை மேதை கொடுமுடி சுந்தராம்பாள் நினைவு வரும் இப்போது அங்குச் செல்பவர்கட்கு.,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/155&oldid=855999" இலிருந்து மீள்விக்கப்பட்டது