பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுத் தலவழிபாடு - ### பறித்த மலர்க்கொடு வந்துமை ஏத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை திண்டப்பெறா - திருலே கண்டம் (6)' என்பது இதன் ஆறாவது பாடல். இப்பதிகத்தில் ஏழாவது பாடல் காணப்பெறவில்லை. 1958-ஆம் ஆண்டு மே மாதம் (என் அன்னையா? இவப்பேறு அடைந்த ஆண்டு) கோவைக்குக் கம்பராமாயண ஆராய்ச்சிக்காக (4 - நாள் திட்டம்) கம்பன் அடிப்பொடி, மர்ரே கம்பெனி ராஜம் முதலியோருடன் கோவை சென்றி ருந்தபொழுது, அடியேனும் கம்பன் அடிப்பொடியும் {காரைக்குடி, சா. கணேசன்) திரும்பும்போது திருச்செங் கோடு வந்தோம். அ டி யே னு க் கு ம் அவருக்கும் மலைமேல் செல்ல வேண்டும் என்ற உந்தல் ஏற்பட்டது. இருவரும் மலை ஏறினோம். செங்குத்தான மலை; அப்போது படிக்கட்டுகளும் சரியாக இல்லை. கம்பனடிப் பொடி அடியேனைவிட பத்தாண்டுகள் மூத்தவராயினும் விரைந்து ஏறினார். அடியேனுக்கு அடிக்கடி தளர்ச்சி ஏற்பட்டதால் சற்று மெதுவாகவே ஏறினேன். என்ன ரெட்டியார்? என்னைவிட இளைஞர். இப்படித் தளர் கின்றீர்களே?’ என்று கிண்டல் செய்து கொண்டே வந்தார். மலையேறி முருகனையும், சிவபெருமானையும் சேவித்தோம். இந்த நிகழ்ச்சி இன்றும் அடியேன் மனத்தில் பசுமையாகவே உள்ளது. நாங்கள் வந்தபோது தேர்த் திருவிழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஊருக்குள் பெருங்கூட்டம். சிறு சிறு கடைகள் - பொரி உருண்டை, கடலையுருண்டை, குச்சி மிட்டாய்க் கடைகள் எங்குப் பார்த்தாலும் இருந்தன. வெயிற் காலமாதலால் பல தண்ணிர் பந்தல்களும் இருந்தன. கொங்கு வேளாளர்கள் உழைப்பிற்குப் பேர் போனவர்கள். திருவிழாவில் உழைப்பாளர்கள் கூட்டமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/154&oldid=855998" இலிருந்து மீள்விக்கப்பட்டது