பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醬靈藝 ஞானசம்பந்தர் வில்லாள் வரையாக மாகாக இானாக வேடங்கொண்டு புல்லார் புரமெரித் தார்க்கிடம் போலும் புலியுமானும் அல்லாத சாதிமதம் அங்கழல்மேல் கைகூப்பு அடியார் கூடிச் செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியும் திருகனாவே (6)

ான் .து ஆறாவது பாடல். . ;, &

புனிகோய் தீர்த்தல் : திருநணாவிலிருந்து திரும்பி வந்து கொடியாடச் செங்குன்றுாரில் தங்குகின்றார். அப்பொழுது பணிக்காலமாதலால் அந்நாட்டின் இயல்பின்படி தோன்று வதாகிய பணியென்னும் சுரநோய் ஆளுடைய பிள்ளை யாருடன் வந்த அடியார்களையும் தொடர்ந்து வருத்தியது. இதனையுணர்ந்த சண்பை வேந்தர், இந்நிலத்தின் இயல்பெனினும், இறைவனடியார்களாகிய நமக்கு எய்தப் பெற்றது" என்று கூறி இறைவனைப் போற்றுகின்றார். உலகினை அழிக்க வந்த நஞ்சைத் தன்னகத் தடக்கி இடர் நீக்கியது இறைவனது திருநீலகண்டம். ஆதலால் "எவ்விடத்தும் அடியார்களைப் பற்றிய இடர்களை நீக்கி யருள்வது எம்பிரான் திருநீலகண்டம்' என்று அதன் மீது ஆணைவைத்து, அவ்வினைக்கிவ்வினை (1.116) என்ற முதற் குறிப்பினையுடைய திருநீலகண்டப் பதிகம்” பாடிப் பரமனைப் போற்றுகின்றார், மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப் பிழையா வண்ணம் 3. இது பொதுப் பதிகமாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/153&oldid=855997" இலிருந்து மீள்விக்கப்பட்டது