பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுத் தலவழிபாடு #so வந்தவர், வெந்த வெண்ணிறனிந்து (1,107 என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடிச் செங்குன்றுார்ப் பெருமானைப் போற்றுகின்றார். இதில், ஓங்கிய மூவிலைகற்சூலம் ஒருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றுணர்வாய்ந்த பாங்கனதாள் தொழுவார் வினையாய பற்றறுமே. (6). என்பது ஆறாவது பாடல். இதன் பிறகு திருநணா என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர் பந்தார் விரல் மடிவாள் (2.72) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். எனக்குத் திருமணம் ஆகி. மாமனார் வீட்டில் தங்கியிருந்தபோது (1937 - மார்ச்சு என்பதாக நினைவு) என் மனைவியுடன் இங்கு வந்து ஆற்றில் நீராடி பவானியம்மனை வழிபட்டுத் தலத்து இறைவனையும் சேவித்த நினைவு இன்னும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. சம்பந்தர் இங்கு வந்து பாடிய பதிகத்தின், முன்பனிக் காலத்தில் இங்கெழுந்தருளியபோது உடன் வந்த தொண்டர் குழாம் குளிர்க் கருத்தலால் வருந்தின போது திருநீலகண்டப் பதிகம் (1.487 பாடி அதனைப் போக்குவித்தனர். சம்பந்தர் பாடல் மட்டும் பெற்ற தலம். 2. கனா (பவானி) : ஈரோட்டிலிருந்து 9 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. காவிரியில் பவானி யாறு கூடும் இடம் (கூடுதுறை) நல்ல இயற்கைக் காட்சி. சமுக்காளத் தறி மிகுதி. பவானி சமுக்காளம் பேர் பெற்றது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/152&oldid=855996" இலிருந்து மீள்விக்கப்பட்டது