பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கொங்கு நாட்டுத் தலவழிபாடு "கொங்கு நாட்டுத் தல வழிபாடு' என்று தனியாகத் திட்டங் கொண்டு பிள்ளையார் புறப்படவில்லை. சோழ இாட்டுப் பயணத்தின் (மூன்றாவது சுற்று)போது இதனைத் தொடருகின்றார். கொங்கு நாட்டுச் சிவத்தலங்கள் ஏழு. இவற்றுள் திருப்புக்கொளியூர் (அவினாசி), திருமுருகன் பூண்டி ஆகிய இரண்டு திருத்தலங்கட்கும் காழிப் பிள்ளையார் வரவில்லை. ஏனைய ஐந்து தலங்களையே வழிபட்டதாகத் தெரிகின்றது. திருசய்ங்கோய் மலைத் தலத்தை வழிபட்டவுடன் பிள்ளையார் கொடிமாடச் செங்குன்றுார் வருகின்றார். 1. கொடிமாடச் செங்குன்றுார் : (திருச்செங்கோடு) சேலம் . ஈரோடு இருப்பூர்திப் பாதையில் சங்கரி துர்க்கம் என்ற நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. மலை உயரம் 1901 அடி. மலைமேல் கோயில் உள்ளது. அர்த்தநாரீசுவரர் மூலத்தானத் திருவுருவம் சலவைக் கல்லாலாகியது; மிக அழகியது. திருவடியில் நீரூற்று. இப்பெருமான் எழுந்தருள்வது வைகாசித் திருவிழாவில் திருத்தேர் விழாவிற்கு, முருகன் சந்நிதி மிகவும் பெரியது. இந்த முருகனைத் தரிசித்தற்கு *நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே" {கந்த, அலங். 90) என்பர் அருணகிரிநாதர். சம்பந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/151&oldid=855995" இலிருந்து மீள்விக்கப்பட்டது