பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் #07. இடிகொள்முழவோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச் செடிகொள்வினை யகலமன மினியவர்கள் சேர்திருகல் லுரே. {5}. என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். எப்பொழுதும் ஊர்ப் பெருமக்களும் மறையவர்களும் சூழ்ந்து கொண்டு தற்பொழுது போக்குகின்றனர். பிள்ளை யாரும் காலையிலும் மாலையிலும் நல்லூர்ப் பெருமானை வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டு காலங்கழிக் கின்றனர். அப்பர் பெருமானுக்குத் திருவடி தீட்சை நல்கிய நல்லூர் நாயகன் சண்பை வேந்தரையும் சில நாட்கள் தங்கி வைத்து விடுகின்றார். நாமும் தலப் பயணத்தின் முதற். பகுதியை நிறைவு செய்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/150&oldid=855994" இலிருந்து மீள்விக்கப்பட்டது