பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} of ஞானசம்பந்தர் கோபுர வழிபாடு நடைபெறுகின்றது. பின்னர்த் திருக் கோயிலை அடைந்து ஆனந்தக் கண்ணிர் பொழிய அதனை வலம் வருகின்றார். பின்னர் இறைவன் திரு முன்பு சென்று கொட்டும் பறை சீராற் (1.86) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடிப் போற்றுகின்றார். எங்கள் பெருமானை இகையோர் தொழுதேத்தும் கங்கள் பெருமானை கல்லூர் பிரிவில்லாத் தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல் தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது பாடல். இப்பதியில் ஒரு சில நாட்கள் தங்கி விடுகின்றார். தாடோறும் விமலர்தாள் விருப்புடன் வணங்குகின்றார். இன்னிசைப் பதிகங்களையும் பாடுகின்றார். இங்ஙனம் பாடிய பதிகங்களுள் பெண்ணடிருந் திருமேனி (2. 57) என்ற முதற்குறிப்புடையது ஒன்று. கிணங்க வரும் மூவிலையும் அனலும் ஏக்தி நெறிகுழலாள் அணங்கமரும் பாடலோ டாடல் மேவும் அழகிளிர் தினங்கவரும் ஆடரவும் பிறையும் சூடித் திருகல்லூர் கணங்கமழும் கோயிலே கோயி லாக மகிழ்ந்தீரே. - (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். இன்னொரு பதிகம் வண்டிரிய விண்ட (3.83) என்ற முதற் குறிப் புடைய்துே. . w பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும் முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம் .۶

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/149&oldid=855992" இலிருந்து மீள்விக்கப்பட்டது