பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் {{}$ மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில் பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ் புண்மங்கை என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை பதுவே, (6) என்பது ஆறாவது தமிழ் மணங்கமழும் நறுமலர். புள்ளமங்கை இறைவனிடம் விடை பெற்றுக்கொண்டு சேலூர்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். சேலூர் ஈசனைச் சேவித்துகொண்டு பாலைத்துறை வருகின்றார். தலத்துப் பெருமானை வழிபட்டுக்கொண்டு (பதிகம் இல்லை) கல்லூர் வருகின்றார். நல்லூர் மறையவர்கள் எதிர் கொண்டு சிவபுரச் செம்மலாருக்குப் பெரிய வரவேற்பு நல்குகின்றனர். பிள்ளையார் முத்துச் சிவிகையினின்றிறங்கி அந்தணர் குழாம் முன் செலத் தாமும் பரிசனங்களும் அவர் களைத் தொடர்ந்து செல்லுகின்றார். வரும் வழியில் 60. சேலூர் : தேவராயன் பேட்டை . பாபநாசம் வட்டத்திலுள்ளது. இதனைச் சம்பந்தர் வழிபட்டதாகச் சேக்கிழார் பெருமான் குறித்துள்ளார். இது வைப்புத்தலம். 61. பாலைத்துறை : பாபநாசம் இருப்பூர்தி நிலையத்தி விருந்து 1 கல் தொலைவு. அப்பர் பெருமான் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 62. கல்லூர் : சுந்தரப் பெருமாள் இருப்பூர்தி நிலை யத்திலிருந்து 2 கல் தொலைவு. அப்பருக்குத் திருவடி தீட்சை தந்த தலம். அமர்நீதி நாயனார் இறைவன் தந்த கோவணத்திற்குப் பதிலாகத் தாமும் புதல்வனும் மனைவியும் தராசேறிக் கோவணக் குவியலோ அர்ப்பணம் செய்த தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/148&oldid=855991" இலிருந்து மீள்விக்கப்பட்டது