பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த் ஞானசம்பந்தர் சம்பந்தர் பெருமான், முன்னை நான்மறை (3. 35) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடித் தலத்து இறைவனை வழிபடுகின்றார். ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் கூறினார் அமர்தரும் குமரவேள் தாதையூர் ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய் தேறினார் வழிபடுங் தென்குடித் திட்டையே. (7) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். - தென்குடித்திட்டை, ஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு சக்கரப்பள்ளி என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். 18.கினார் வெண்மழு" {3, 27) என்ற திருப்பதிகம் பாடிச் சக்கரப்பள்ளி இறைவனைச் சேவிக்கின்றார். பாங்கினார் முப்புரம் யாழ்பட வெஞ்சிலை வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல் தாங்கினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். சக்கரப்பள்ளியானிடம் விடைபெற்றுக் கொண்டு புன்னகங்கை-திருவாலந்துறை வருகின்றார். பாலுந்துறு திரனாகின. (1.15) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலை புனைந்து புள்ளமங்கைப் பெருமாளைச் சேவிக் கின்றார். இதில், 38. சக்கரப்பள்ளி தஞ்சை-மயிலாடுதுைைற இருப் பூர்தி வழியில் அய்யம்பேட்டை நிலையத்திலிருந்து கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 59. புள்ளமங்கை ஆலந்துறை (பசுபதி கோயில்) : மயிலாடுதுறை - தஞ்சை இருப்பூர்தி வழியில் பசுபதி கோயில் என்ற நிலையத்திலிருந்து கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/147&oldid=855990" இலிருந்து மீள்விக்கப்பட்டது