பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் #03 சறுே வளியாடரவோடாமை (3.78) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலை தொடுத்துத் தவத்து இறைவனை வழி படுகின்றார். - செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்து ஐயமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் மண்ணலிடமாம் வையம்விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்கிழி விலாதவகையார் வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாத அவர் வேதிகுடியே. (6) என்பது இம்மாலையின் செந்தமிழ் நறுமணம் கமழும் ஆறாவது வாடா மலர். வேதிகுடி இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு வெண்ணி ' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். சடையானைச் (2. 14) என்ற முதற்குறிப்புடைய திருப் பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். முத்தினை முழுவயிரத் திரள்மா ணிக்கத் தொத்திணைத் துளக்க மிலாதவி ளக்காய் வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அத்தனை அடையிவல் லார்க்கில்லை அல்லலே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். வெண்ணியூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு தென்குடித்திட்டை' என்ற தலத்திற்கு வருகின்றார் 56. வெண்ணியூர் (கோயில் வெண்ணி) : தஞ்சை. நாகூர் இருப்பூர்தி வழியில் நீடாமங்கலத்துக்கு அடுத்த கோயில் வெண்ணி என்ற நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. 57. தென்குடித்திட்டை: திட்டை என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து l கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/146&oldid=855989" இலிருந்து மீள்விக்கப்பட்டது