பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சோழநாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) அப்பர் சுவாமிகட்குத் திருவடி தீட்சை செய்தவர் நல்லூர்ப் பெருமான். இதையறிந்துதான் பிள்ளையார் இத் திருத்தலத்தில் சில நாட்கள் தங்கினார் போலும். இத் திருத்தலத்திலிருந்து சோழ நாட்டு இரண்டாம் சுற்றுப் பயணத்தைத் தொடங்குகின்றவர் கருகாவூர் என்ற திருத் தலத்திற்கு வருகின்றார். ‘முத்திலங்கு முறுவல் (346) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடி இறைவனை வழுத்து கின்றார். மையலின்றி மலர்கொய்து வணங்கிடச் செய்யவுள்ளம் மிககல்கிய செல்வத்தர் , கைதன்முல்லை கமழும் கருகாவூரெம் ஐயர்வண்ணம் மழலும் மழல்வண்ணமே. (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாம் பாடல். கருகாவூர் அழகரிடம் விடை பெற்றுக் கொண்டு அவளி வணல்லூர் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். 1. கருகாவூர் (திருக்களாவூர்) மயிலாடுதுறைதஞ்சை இருப்பூர்தி வழியில் பாபநாசம் நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. 2. அவளிவணல்லூர்: தஞ்சை - நாகூர் இருப்பூர்தி வழியில் கோயில் வெண்ணி என்ற நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/158&oldid=856002" இலிருந்து மீள்விக்கப்பட்டது