பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J ió ஞானசம்பந்தர்

கொம்பிரிய வண்டுலவு (3.82) என்ற முதற் குறிப். புடைய செந்தமிழ் மாலை புனைந்து தலத்துப் பெருமா. னைச் சேவிக்கின்றார்.

குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு கழலின்மிசையிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித் தொழலும்வழி பாடுமுடை யார்துயரு கோயுமில ராவர் அழலுமழு ஏந்துகையி னாலுறைவ. தவளிவணல் லுனரே. (5) என்பது இம் மாலையின் தமிழ் மணங்கமழும் ஐந்தாவது வாடா நறுமலர். : அவளிவணல்லூர் அறிவரியனாய பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு பரிதி கியமம் என்ற திருத்தலத் திற்கு வருகின்றார். விண்கொண்ட தூமதி (3.104) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை புனைந்து தலத்துப் பெருமானைச் சேவிக்கின்றார். பிறைவனர் செஞ்சடை பின்தயங்கப் பெரியமழு வேக்தி - மறையொலி பாடிவெண் ணிறுபூசி மனைகள் பலிதேர்வார் இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிங் இயமமே. (7). 3. பரிதி நியமம்: தஞ்சை-நாகூர் இருப்பூர்தி வழியில் சாலியமங்கலம் நிலையத்திலிருந்து 8 கல் தொலைவு. தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் ப்ேருந்து வழியில் 10 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். « . »

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/159&oldid=856003" இலிருந்து மீள்விக்கப்பட்டது