பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 117 என்பது இத்திருமாலையின் தமிழ் மனம் கமழும் ஏழாவது நறுமலர். பரிதி நியமப் பரமனிடம் விடை பெற்றுக் கொண்டு பூவனூர் வருகின்றார். பூவனூர் இறைவனை வழிபட்டு (பதிகம் இல்லை) அவரிடம் விடை பெற்றுக் கொண்டு ஆவூர்ப் பசுபதீச்சரம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ‘புண்ணியர் பூதியர் (18) என்ற முதற் குறிப்புடைய திருப் பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். குற்றமறுத்தார் குணத்திலுள்ளார் கும்பிடுவார்தமக் கன்புசெய்வார் ஒற்றைவிடையினர் நெற்றிக்கண்ணாருறை பதியாகும் செறிகொல் மாடம் சுற்றியவாசலின் மாதர்விழாச் சொற்கவிபாட நிதானகல்கப் பற்றியவகையினர் வாழுமாவூர்ப் பசுபதியிச்சரம் பாடுநாவே. (6) என்பது இத்திருப்பதிகத்தின் ஆறாவது பாடல். மீண்டும் கல்லூர் வருகின்றார். இறைனை வழுத்துகின்றார் (பதிகம் இல்லை). . நல்லூர் இறைவனிடம் விடை பெற்றுக்கொண்டு திருவலஞ்சுழி" என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். மூன்று 4. பூவனூர் நீடாமங்கலம் இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 4 கல் தொலைவு. அப்பர் சுவாமிகள் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 5. ஆவூர்ப் பசுபதீச்சரம்: தஞ்சை - மயிலாடுதுறை இருப்பூர்தி வழியில் சுந்தரப் பெருமாள் கோயில் நிலையத்தி லிருந்து (சுவாமிமலை நிலையத்திற்கு அடுத்தது) 4 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 6. வலஞ்சுழி (திருவலஞ்சுழி): சுவாமிமலை என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. வெள்ளைப் பிள்ளையார் சந்நிதி இங்கு மிகு புகழ் வாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/160&oldid=856005" இலிருந்து மீள்விக்கப்பட்டது