பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஞானசம்பந்தர் கழைவளர் கவ்வைமுத்தம் கமழ்காவிரி யாற்றயலே தழைவனர் மாவின்கல்ல பலவின்கனிகள் தயங்கும் குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா இழைவனர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே. (6) என்பது இத்திருமாலையின் ஆறாவது நறுமணங் கமழும் வாடாமலர். குடமுக்கு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு குடந்தைக் கீழ்க் கோட்டம்' வருகின்றார். நாகேசுவரனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). நாகேசுவரனிடம் விடைபெற்றுக் கொண்டு குடந்தைக் காரோணம் வரு சுருக்கம் 5.22:4, 5.22:8 என்ற அப்பர் பாசுரங்களிலும் கூறப் பெறுகின்றது. 1981-ல் மகாமகம் வந்தது. நானும் என் மனைவியும் மகாமகக் குளத்தில் மூழ்கிப் பிறவிப் பயன் பெற்றோம். 22. குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரன் கோயில்): கும்பகோணம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. ஊர் நடுவேயுள்ள பெரிய கோயில்; சித்திரை மாதம் 3 நாட்கள் (11, 12, 13-ம் நாட்கள்) சூரிய கிரணங்கள் மூலத்தானத்திலுள்ள மூர்த்தியின் மேல் படுகின்றன. இதையே சூரிய பூசை என்பது மரபு. அப்பரின் 6.75:1 என்ற தேவாரம் இதைக் குறிப்பிடுகின்றது. அப்பர் தேவாரம் மட்டிலும் பெற்ற தலம். - 23. குடந்தைக் காரோணம் (காசிவிசுவநாதர் கோயில்): கும்பகோணம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆ கல் தொலைவு. மகாமகக் குள்த்தின் வடகரையில் உள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். இந்தக் கோவிலில் சில மணி நேரம் தங்கியிருந்தோம்; மகாமக விழாக் காட்சிகளைக் கண்டு களித்தோம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/171&oldid=856017" இலிருந்து மீள்விக்கப்பட்டது