பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 129 கின்றார். வாரார் கொங்கை (1.72) என்ற முதற்குறிப் புடைய செந்தமிழ்ப் பாமாலை பாடிக் காசிவிசுவநாதரை வழுத்துகின்றார் காழிப்பிள்ளையார். பூவார் பொய்கை யலர்தாமரை செங்கழுநீர் புறவெல்லாம் தேவார் சிங்தை யந்தணாளர் சீரால் அடிபோற்றக் கூவார் குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை காவார் பொழில்சூழ்ந் தழகார்குடந்தை காரோ ணத்தாரே. (6) என்பது இப்பாமாலையின் தமிழ் மணங்கமழும் ஆறாவது வாடா நறுமலர். காகிவிசுவநாதரிடம் விடைபெற்றுக் கொண்டு நாகேச் சரம்: வருகின்றார். வந்தவர் இரண்டு பதிகங்களால் தலத்துப் பெருமானை வழிபடுகின்றார். பொன்கேர்தரு' (2.24) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் முதலாவது. இதில், கலைமான் மறியும் கனலும் மழுவும் நிலையா கியகை யினனே நிகழும் நலமா கியகா கேச்சர நகருள் தலைவா எனவல் வினைத னறுமே. (5) 24. நாகேச்சரம் (திருநாகேஸ்வரம்): கும்பகோணத் தருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்ற இருப்பூர்தி நிலையத் திலிருந்து 1 கல் தொலைவு. கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் வந்து திரும்புதலே சிறந்தது. சேக்கிழார் அடிகள் பெரிதும் இத்தலத்தில் ஈடுபட்டவர். தாம் பிறந்து வளர்ந்த குன்றத்துாரில் தாம் எடுப்பித்த திருக்கோயிலுக்கு திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டனர். சந்திரன், சூரியன், ஐந்தலை நாகம் பூசித்ததை அப்பர் தேவாரம் 5.52:4 என்ற பாசுரம் கூறும். மூவர் தேவாரமும் பெற்ற தலம். - Q

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/172&oldid=856018" இலிருந்து மீள்விக்கப்பட்டது