பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஞானசம்பத்தர் என்பது ஐக்தாவது பாடல். அடுத்த பாமாலை தழை கொள் சந்தும் (2.119) என்ற முதற் குறிப்புடையது. வம்புகாறும் மலரும்மலைப் பண்டமும் கொண்டுநீர் பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை கம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சர கண்ணுவார் உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவது முண்மையே. (5) என்பது இந்தப் பதிகத்தில் இஃது ஐந்தாவது பாடல். நாகேச்சர நக்கபிரானிடம் விடைபெற்றுக் கொண்டு திருவிடை மருதூர்' என்ற திருத்தலம் வருகின்றார். இத்தலத்துப் பெருமானை ஆறு பதிகங்களால் வழிபடு ஒன்றார் காழிப் பிள்ளையார். பதிகம்-1: ஒடேகலன் (1.32) என்ற முதற் குறிப்புடையது. இதில், வன்புற்றின் நாகமசைக் தழகாக என்பிற்பல மாலையும்பூண் டெருதேறி அன்பிற்பிரி யாதவளோடு முடனாய் இன்புற்றிருந் தான்றனிடை மருதீதோ. (6) என்பது ஆறாவது திருப்பாடல். பதிகம்-2: இப்பதிகம் தோடொர்காதினன் (1.95) என்ற முதற் குறிப்புடைய திருவிருக்குக் குறள் பதிகமாகும். 25. இடைமருதூர் (திருவிடைமருதுார்): மயிலாடுதுறைதஞ்சை இருப்பூர்தி வழியில் திருவிடமருதூர் நிலையத் திற்கு மிக அருகில் உள்ளது. வரகுணபாண்டியன் பெரும் புகழ் வரலாற்றுத் தொடர்புடையது. பட்டினத்தடிகள் வழிபட்ட தலம். அவர் அருளிய மும்மணிக் கோவை பெற்றது, இங்குத் தைப்பூசத்தில் காவிரியில் நீராடுதல் சிறந்தது. (பாசுரம் 2.35:5) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/173&oldid=856019" இலிருந்து மீள்விக்கப்பட்டது