பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 133 உலவாக்கிழிபெறுதல்: பிள்ளையார் குரங்காடுதுறைப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருவாவடுதுறை" வருகின்றார். தொண்டர் குழாம் எதிர் சென்று வரவேற்பு நல்குகின்றது. சண்பை வேந்தர் நித்திலச் சிவிகையினின்று இறங்கித் திருக்கோயிலின் முன் செல்கின்றார். கோபுரத்தை இறைஞ்சி திருக்கோயிலை வலம் வந்து ஆவடுதுறை ஆர் அமுதை வழிபடுகின்றார். பின்னர் அப்பதியிலுள்ள ஒரு திரு மடத்தில் எழுந்தருளுகின்றார். இந்நிலையில் பிள்ளை யாரின் திருத் தந்தையார் சீகாழியினின்றும் போந்து தாம் வேள்வி செய்தற்குரிய காலம் அணுகியதெனத் தெரிவித்து அதற்குரிய பொருள் வேண்டுமெனத் தன் அருமை மைந்த னிடம் கூறுகின்றார். அவரது வேண்டுகோட் கிணங்க பிள்ளையார் ஆவடுதுறை மாசிலாமணி ஈசரின் திரு முன்பு எய்தி நீள்நிதி வேண்டினார்க்கு சவதொரு பொருளையும் உடையேனல்லேன். நின் திருவடி துணையன்றி மற்றொன் றையும் கனவிலும் அறியேன்" எனக்கூறி, இறைவனது பேரருளை வேண்டும் நிலையில் இடரினும் தளரினும் (3.4) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். இதில், - இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. 27. ஆவடுதுறை (திருவாவடுதுறை): நாரசிங்கன் பேட்டை என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. திருமூலர் திருமந்திரம் அருளிய திருத்தலம். சம்பந்தர் தமது தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டு இறைவனைப் பாடி 1000 பொன் பெற்று அதைக் கொடுத் ததை அப்பர் தேவாரம் 4.56:1 கூறும். திருவிசைப்பா பாடிய திருமாளிகைத்தேவர் தொடர்பு இத்தலத்திற்குண்டு. திருவாவடுதுறை யாதீனத் தலைமைத் திருமடம் இங்கு உள்ளது. . . . & - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/176&oldid=856022" இலிருந்து மீள்விக்கப்பட்டது