பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஞானசம்பந்தர் இதுவோ எமையாளுமா lவதொன் றெமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை யரனே. (1) என்பது நாலடி வைப்பாகிய இப்பதிகத்தின் முதற் பாடல். இவ்வாறு பொருளை விரும்பிப் போற்றிய பிள்ளையாரின் விருப்பத்தை நிறைவேற்றக் கருதிய இறைவனது திரு வருளால் சிவபூதம் ஒன்று வந்து தோன்றுகின்றது. 1000 பொன்னடங்கிய பொற்கிழியொன்றை இறைவன் சந்நிதியி லுள்ள பீடத்தின்மேல் வைத்து இப்பொற்கிழியானது எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி. இறையருளால் உமக்கு அளிக்கப் பெற்றது' என்று கூறி மறைந்து விடுகின்றது. ஆவடுதுறை மாசிலாமணி யீசர் அருளிய உலவாக் கிழியினைத் தலைமேற் கொண்டு போற்றிய சண்பை வேந்தர் அப்பொன் முடிப்பினைத் தந்தையார் திருக்கையிற் கொடுத்து, முழு முதற் பொருளாகிய சிவபெருமான் ஒருவனையே முதல்வனாகக் கொண்டு பண்டை மறை முறைப்படி செய்தற்குரிய நல்ல வேள்விகளை நீவிர் செய் தற்கு மட்டுமன்றி, வேணுபுரத்திலுள்ள வேதியர் அனை வரும் செய்தற்கும் வேண்டும் பொன்களை மேன்மேலும் தந்து வளர்வது இவ்வுலவாக்கிழி என்று கூறித் தந்தை யாருக்கு விடை கொடுக்கின்றார். அவரும் அக்கிழியுடன் சீகாழிப் பதிக்குத் திரும்புகின்றார். - பிள்ளையார் பொன் வேண்டிப் பாடிய இத்திருப்பதிகம் ஆவடுதுறை இறைவனை வேண்டும் நிலையில் அமைந் துளிது. இதுவோ எமையாளுமா lவதொன் றெமக்கில்லையேல் அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறை யானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/177&oldid=856023" இலிருந்து மீள்விக்கப்பட்டது