பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 135 என்ற தொடர் பாடல்தோறும் நாலடிமேல் வைப்பாக இடம் பெற்றிருப்பதாலும், இதன் திருக்கடைக் காப்பில் விலையுடை யிருந்தமிழ் மாலை எனப் பிள்ளையார் இத் திருப்பதிகத்தைக் குறிப்பிடுதலாலும் இப்பதிகம் ஆவடுதுறை இறைவனை நோக்கிப் பாடப் பெற்றது என்பது தெளி வாகின்றது. பிள்ளையாருக்குப் பொற்கிழியளித்த அற்புத நிகழ்ச்சியினை, மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிரு கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஆரர்க்கம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே. (4.56:1) என்று பிள்ளையாரின் கெழுதகை நண்பராகிய அப்பர் பெரு மானும் மேற்காட்டிய திருநேரிசையில் போற்றிப் புகழ்ந் துள்ளமை ஈண்டு கருதத்தக்கது. ஆவடுதுறை அப்பரிடம் விடைபெற்றுக் கொண்டு பிள்ளையார் கோழம்பம்' என்ற திருத்தலம் அடைகின்றார். 'ற்ேறானை மீள் சடை’ (2.13) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி வழிபடுகின்றார். சொல்லானைச் சுடுகணையாற் புரமூன் றெய்த வில்லானை வேதமும் வேள்வியு மானானைக் 28. கோழம்பம் : நாரசிங்கம் பேட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/178&oldid=856024" இலிருந்து மீள்விக்கப்பட்டது