பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#35 ஞானசம்பந்தர் கொல்லானை புரியானைக் கோழம்பம் மேவிய கல்லானை யேத்து மினும்மிடர் கையவே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடல். கோழம்பத் திறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு வைகன் மாடக் கோயில் என்ற திருத்தலத்திற்கு வரு கின்றார். துளை மதியுடைமறி (3.18) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த துங்கள் தங்கிடம் வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே. (4) என்பது இத்திருப்பதிகத்தின் நான்காவது பாடல். வைகல் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு திரு கல்லம் வருகின்றார். 'கல்லால் நிழல்மேய (1.85) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்து கின்றார். . வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும் பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை ஈசன் எனவுள்கி யெழுவர் வினைகட்கு காசன் கமையாள்வான் கல்ல நகரானே. (5) என்பது இத்திருப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடல். 29. வைகன் மாடக் கோயில் (வைகல்) : ஆடுதுறை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. கோச் செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களுள் ஒன்று. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 30. கல்லம் (கோனேரி ராஜபுரம்) : ஆடுதுறை இருப் பூர்தி நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. திருவிசைப்பா பாடிய கண்டராதித்தர், அவர் தேவியாகிய செம்பியன் மகாதேவியார் ஆகிய இருவர் திருவுருவம் கோயில் கல் வெட்டின் கீழ் உள்ளது. - . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/179&oldid=856025" இலிருந்து மீள்விக்கப்பட்டது