பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 137 நல்லத்து நம்பனிடம் விடை பெற்றுக் கொண்டு சிறுகுடி என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். திடமலி' {3.97) என்ற திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். இதில், செற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவிய பெற்றிகொள் பிறைமுடி யீரே பெற்றிகொள் பிறைமுடி பீருமைப் பேணிகஞ் சற்றவ ரருவினை பிலரே. (5) என்பது ஐந்தாவது திருப்பாடல். சிறுகுடிச் செம்மலிடம் விடைபெற்றுக் கொண்டு அழுந்துர் மாடக் கோயில் வருகின்றார். தொழுமாறு வல்லார் (2.20) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி தலத்து இறைவனை வழுத்துகின்றார். அலையார் புனல்சூழ் அழுங்தைப் பெருமான் நிலையார் மறியுங் கிறைவெண் மழுவும் இலையார் படையும் இவையேந்து செல்வ நிலையா வதுகொள் கெனநீ கினையே. (5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். 31. சிறுகுடி பேரளம் என்ற இருப்பூர்தி நிலையத் திலிருந்து 5 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். - -- 32. அழுந்துணர்: தேரழுந்துார் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. ஒரே வீதியின் ஒரு முனையில் இத்தலமும், எதிர் முனையில் மங்களாசாசனம் பெற்ற திருமால் தலமும் உள்ளன. கவிச் சக்கரவர்த்தி கம்பர் வீடு இருந்த இடம் என்னும் கம்பர்மேடு ஒன்றும் இங்குண்டு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/180&oldid=856027" இலிருந்து மீள்விக்கப்பட்டது