பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 ஞானசம்பந்தர் அழுந்துர் அண்ணலிடம் விடை பெற்றுக் கொண்டு திருத்துருத்தி' என்ற திருத்தலத்தை அடைகின்றார் திருஞான சம்பந்தர். வரைத்தலைப் பசும்பொன். (2.98) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை பாடி இறைவனை வழுத்துகின்றார். துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாத என்னை மையல்செய்தி மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு உடம்புவிட்(டு) இறக்குமாறு காட்டினாய்க் - கிழுக்குகின்ற தென்னையே. (5) என்பது இத்திருமாலையின் ஐந்தாவது தமிழ் மணங் கமழும் வாடா நறுமலர். திருத்துருத்திப் பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு மூவலூர்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). மூவலூரை விட்டு மயிலாடு துறை" வருகின்றார். இரண்டு பதிகங்களால் தலத்து இறைவனை வழிபடுகின்றார். 33. துருத்தி (குத்தாலம்): குத்தாலம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. இறைவன் கட்டளைப் படி இங்குள்ள குளத்தில் மூழ்கிய சுந்தரர் தமது உடற் பிணி நீங்கி மணி ஒளி சேர் திருமேனியராகின்றார். 34. மூவலூர்: மயிலாடுதுறைக்கு அருகிலுள்ளது. இது வைப்புத்தலம். மூவலூர் முக்கண்ணனூர் காண்மினே (அப்பர் தேவாரம். 5.65 : 8). 35. மயிலாடுதுறை (மாயூரம்): மயிலாடு துறை டவுன் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. இருப்பூர்தி சந்திப்பிலிருந்து பேருந்து மூலமும் செல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/181&oldid=856028" இலிருந்து மீள்விக்கப்பட்டது