பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) Ł39. ‘கரவின்றிகன் (1.33) என்ற முதற்குறிப்புடையது முதற் பதிகம். இதில், ஊனத்திருள் நீங்கிட வேண்டில் ஞானப்பொருள் கொண்டடி பேணும் தேனொத் தினியா னமருஞ்சேர் - வானம் மயிலாடு துறையே. (3) என்பது மூன்றாவது பாடல். ஏனவெயிறாடாவோ (3.70) என்ற முதற்குறிப்புடையது இரண்டாவது பதிகம். கடந்திகழ் கருங்களி றுரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய் விடந்திகழு மூவிலைகல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாம் தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய் மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக - நாறுமயி லாடுதுறையே. (6). என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். மயிலாடுதுறை இறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு செம்பொன்பள்ளி என்ற திருத்தலம் அடைகின்றார்" 'மருவார்குழலி (1.25) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடி இறைவனை வழிபடுகின்றார். உமையம்மை மயில் உருவில் இறைவனை வழிபட்ட தலம். காவிரியாற்றின் தென்கரையிலுள்ளது. ஐப்பசி மாதம் முழுவதும் இங்குக் காவிரியில் துலாமுழுக்கு. கடைமுழுக்கு புகழ் வாய்ந்தது. கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று முடவன் முழுக்கு. - - 36. செம்பொன் பள்ளி (செம்பொனார் கோயில்): மயிலாடுதுறை-தரங்கம்பாடி இருப்பூர்தி வழியில் செம் பொனார் கோயில் என்ற நிலையத்திலிருந்து சிறிது, தொலைவில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/182&oldid=856029" இலிருந்து மீள்விக்கப்பட்டது