பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 40 ஞானசம்பந்தர் மலையான் மகளோ டுடனாய் மதிளெய்த சிலையார் செம்பொன் பள்ளி யானையே இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல் நிலையாய் வணங்க கில்லா வினைகளே. (5) என்பது இத்திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். செம்பொன் பள்ளி இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு விளநகர் என்ற திருத்தலத்தை அடைகின்றார். “ஒளிறிளம்பிறை' (2.78) என்ற முதற் குறிப்புடைய திருப் பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். தேவ ரும்மம ரர்களும் திசைகள் மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோ ரமைதி யாற்றழ லுருவினார் மூவரும்மிவ ரென்னவும் முதல்வ ரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேய துவிள நகரதே. - (6) என்பது இப் பதிகத்தின் ஆறாவது பாடல். விளநகர் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு "பறியலூர் வீரட்டம் ' என்ற திருத்தலம் அணைகின்றார். கருத்தன் கடவுள்' (1134) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். 37. விளநகர்: மயிலாடு துறையிலிருந்து 4 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - 38. பறியலூர் வீரட்டம் பறசலூர்), செம்பொனார் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. தக்கன் வேள்வி தகர்த்த வீரட்டம். அவ்வேள்விக்கு வந்த வானோர் குற்றத்தைப் பறித்தமையால் பறியலூர் ஆயிற்று. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/183&oldid=856030" இலிருந்து மீள்விக்கப்பட்டது