பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 14, பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச் செறப்பாதி யந்தஞ் செலச்செய்யும் தேசன் சிறப்பா டுடையார் திருப்பறிய லூரில் விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே. (4) என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல். பறியலூர் வீரட்டப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருவேட்டக்குடி' என்ற திருத்தலம் அடை கின்றார். வண்டிறைக்கும் (3.66) என்ற முதற் குறிப்பை யுடைய செந்தமிழ்ப் பாமாலையைப் பாடித் தலத்து, இறைவனை வழுத்துகின்றார். பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு கானிலவும் மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல் மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார் தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே. (7), என்பது இத்திருமாலையின் ஏழாவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர். r யாழ்முரி பாடியது: திருவேட்டக்குடி இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு திருத்தருமபுரம் அடைகின்றார். தருமபுரம் தி ரு நீ ல க ண் ட ப் பெரும்பாணருடைய 39. வேட்டக்குடி: காரைக்காலிலிருந்து 5 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற ಔಅಳ್ವ o 40. காரைக்காலிலிருந்து 1கல் தொலைவு. சம்பந்தர் யாழ்முரி பாடிய அற்புதத் தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/184&oldid=856031" இலிருந்து மீள்விக்கப்பட்டது