பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஞானசம்பந்தர் ரீதியர் கெடுக்தகையர் நீள்மலையர் பாவை பாதியர் பராயரர் பரம்பரர் இருக்கை வேதியர்கள் வேள்வி யொழியாது மறைநாளும் ஒதியான் காமமும் உணர்ந்திடு நள்ளாறே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது பாடல். இப்பதிகங்கள் இரண்டும் முதல் முறை எழுந்தருளியபோது பாடியவை. நள்ளாற்று நக்கபிரானிடம் விடைபெற்றுக் கொண்டு சாத்தமங்கை வருகின்றார். லே கக்கநாயனார் பிள்ளையாரை எதிர் கொண்டழைத்துப் பிள்ளையாருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலாக அவருடன் வந்த அடியார்களுக்கும் தம் மனையில் திருவமுதமைத்து உபசரித்துப் போற்றுகின்றார். பின்னர் பிள்ளையார் சாத்தமங்கையிலுள்ள அயவந்தி என்ற திருக்கோயிலுக்குச் சென்று திருமலர்க் கொன்றைமால்ல (3.58) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பா மாலை புனைந்து இறைவனைப் போற்றுகின்றார். வேதமாய் வேள்வி யாகி - விளங்கும்பொருள் விட தாகிச் சோதியாய் மங்கை பாகங் கிலைதான சொல்லலாவ தொன்றே சாதியால் மிக்க சீராற் : றகுவார்தொழும் சாத்தமங்கை ஆதியாய் கின்ற பெம்மான் ... ". . அயவந்தி அமர்ந்தவனே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். இப்பதிகத்தில் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ அவந்தி யமர்ந்தவனே (2) நிறைவினார் நீ ல ந க்க ன் நெடுமாநகரென்று 43. சாத்தமங்கை (சீயாத்தமங்கை) . நன்னிலத்தி லிருந்து 7 கல் தொலைவு. பேருந்து வழியில் திருப்புகலூர் உள்ளது. திருநீலநக்கநாயனார் தொண்டு புரிந்த தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/189&oldid=856036" இலிருந்து மீள்விக்கப்பட்டது