பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 145 பிள்ளையார் தருமபுரத்தில் சில நாள் தங்கியிருந்து திருநள்ளாறு’ என்ற திருத்தலம் வருகின்றார். இரண்டு பதிகங்களால் நள்ளாற்றிறைவனைப் போற்றுகின்றார். இந்த இரண்டு பதிகங்களையும் யாழிவிட்டு வாசித்து அனைவரையும் மகிழ்விக்கின்றார் யாழ்ப்பாணர். போக மார்ந்த பூண் முலையாள் (1.49) என்ற முதற் குறிப்புடையது முதற் பதிகம். போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல் காகமார்த்த கம்பெருமான் மேயது கள்ளாறே. {f} என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். இப்பதிகம்தான் மதுரையில் அனல்வாதம் நடைபெற்றபோது சம்பந்தரால் நெருப்பில் இடப்பெற்றது. இது எரியாமல் பச்சென்றிருந்த படியால் ‘பச்சைப் பதிகம்’ என்ற பெயர் பெற்றது. அடுத்த பதிகம் ஏடுமலி கொன்றை (2.33) என்ற முதற் குறிப்புடையது. 42. நள்ளாறு : நள்ளாறு இருப்பூர்தி நிலையத்தி. லிருந்து கல் தொலைவு. சப்தவிடங்கங்களுள் இங்கு நகர விடங்கர்; உன்மத்த நடனம். நளன் பூசித்து கலி நீங்கப் பெற்ற திருத்தலம். கோயிலுக்குப் போகும் வழியில் ஒரு பக்கம் சனி பகவான் உருவம் உள்ளது. சனிப் பெயர்ச்சி விழா மிகு புகழ் பெற்றது. தங்கக் காக்கை வாகனத்தில் இவர் உலா வருவது கண் கொள்ளாக் காட்சி, 10 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/188&oldid=856035" இலிருந்து மீள்விக்கப்பட்டது