பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஞானசம்பந்தர் திருநாகையாரிடம் விடைபெற்றுக் கொண்டு சிக்கல்: வருகின்றார். வானுலாவும்' (2.8) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். இதில், வானுலாவும் மதிவக் துலாவும் மதில்மாளிகை தேனுலாவும் மலர்ச்சோலை மல்குக்திகழ் சிக்கலுள் வேளல்வேளை விழித்திட்ட வெண்ணெய்ப் பெருமானடி ஞானமாக கினைவார் - வினையாயின கையுமே. (i) என்பது முதல் பாடல். சிக்கல் வெண்ணெய்ப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கீழ்வேளுர்' வருகின்றார். மின்னுலாவிய சடை பொன் மீனைச் சிவார்ப்பணம் செய்து முத்தி பெற்ற தலம். சுந்தரர் பொன் பெற்ற தலங்களுள் ஒன்று. சப்தவிடங்கங்: களுள் இங்கு சுந்தரவிடங்கர். பாராவாரதரங்க நடனம். 45. சிக்கல் : தஞ்சை - நாகூர் இருப்பூர்தி வழியில் சிக்கல் நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. வெண்ணெய். விங்கம் சிக்கிக் கொண்டதால் தலப் பெயர். கட்டுமலைக் கோயில். முருகப் பெருமான் சிங்காரவேலர். கந்தர்சஷ்டி விழாவில் 5ஆம் நாள் வேல் பெறுவதும் 6ஆம் நான் மேஷ வாகனத்தின் மீதேறிச் சூரனைச் சங்கரிப்பதும் மிகுபுகழ் வாய்ந்த விழாக்கள். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 46 கீழ்வேளுர்: கீழ்வேளுர் இருப்பூர்தி நிலையத் திலிருந்து கல் தொலைவு, கட்டுமலைக் கோயில், முருகன். பூதித்த தலங்களுள் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/191&oldid=856039" இலிருந்து மீள்விக்கப்பட்டது