பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) #49 வினர் (2.105) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடித் தலத்துப் பெருமானை வழிபடுகின்றார். கொத்துலாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மீகிழ்ந்துள்கித் தொத்துலாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளுர்ப் பித்துலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயில்மன்னும் முத்துலாவிய வித்தினை பேத்துமின் முடுகிய இடர்போமே. (6) என்பது திருப்பதிக மாலையில் ஆறாவது வாடா நறுமலர்.

  • ś. §§

கீழ்வேளுர் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு செங்காட்டங்குடி வருகின்றார் பிள்ளையார். மன்ன வர்க்குப் படைத்தலைவராய்ச் சென்று வாதாபி நகரத்தை அழித்த பரஞ்சோதியாராகிய சிறுத்தொண்ட நாயனார் பிள்ளையாரை எதிர் கொண்டு போற்றுகின்றார். பிள்ளையாரும் அவருடன் அளவளாவிக் கணபதிச்சரம் ன்ைனும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானைப் 47. செங்காட்டங்குடி (திருச்செங்காட்டங்குடி): நன் னிலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு. வழியில் திருப்புகலூர், இராமனதீச்சரம், திருக்கண்ணபுரம் (திருமால் தலம்) உள்ளன. சிறுத்தொண்ட நாயனார் பிள்ளைக்கறி அளித்த அற்புதத் தலம். இந்த அற்புதம் கஅமுது படையல் உற்சவம் என்று சித்திரைத் திங்கள் பரணியன்று மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. உத்திரா பதி சுவாமி திருஎழுச்சி, அவர் தங்கியிருந்த திருஆத்திரமரம் முதலியன காணலாம். சிறுத்தொண்டர் வாதாபிப் போர் வென்று கொணர்ந்த கணபதி பூசித்ததால் கோயில் பெயர் கணபதிச்சரம் ஆயிற்று. எல்லாப் பாடல்களிலும் சிறுத் தொண்டரையும் போற்றுகின்றார். ~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/192&oldid=856040" இலிருந்து மீள்விக்கப்பட்டது