பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஞானசம்பந்தர் பணிந்து பைங்கோட்டு மலர்ப்புன்னை (3.63) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை பாடி இறைவனை வழுத்துகின்றார். - - குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத் துறைக்கெண்டை கவர்குருகே! துணைபிரியா மடங்ாராய்! கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்சர மேய சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே (6) என்பது இப்பாமாலையின் நறுமணம் மிக்க ஆறாவது வாடாமலர். இந்தப் பதிகம் அகத்துறையால் அமைந்தது. செங்காட்டங்குடி எம்மான்மீது காதல் கொண்ட நாயகி நிலையில் தம்மை நிறுத்திப் பறவையினங்களைத் தூது விடுவதாக அமைந்துள்ளது இப்பதிகம். வைணவ சம்பிர தாயப்படி சொன்னால் ஞானசம்பந்தர் நாயகி செங் காட்டங்குடிப் பெருமான்மீது தான் கொண்ட காதலைப் பறவை இனங்கட்குச் சொல்லித் தூது அனுப்புகின்றாள் எனலாம். விடக்தீர்த்தல்: செங்காட்டங்குடிப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருமருகல்: வருகின்றார்: இறைவனை வழிபட்டு அத்தலத்தில் அமர்கின்றார். இத்தலம் காழிப்பிள்ளையாரின் அற்புத நிகழ்ச்சியொன்றி 48. மருகல் (திருமருகல்): நன்னிலத்திலிருந்து 7 கல் தொலைவிலுள்ளது. விடந்தீண்டிய செட்டிப்பிள்ளையை உயிர்ப்பித்து அவனுடன் வந்த பெண்ணை அவனுக்கே சம்பந்தர் மணம் முடித்து வைத்த அற்புதத் தலம். மருகல் என்பது வாழை; வாழைதான் தலவிருட்சம். ஆனால் இது கல் வாழை; சுவாமிக்கு நிவேதனம் செய்யலாம்: யாரும் சாப்பிடக்கூடாது. கோயில், மாடக்கோயில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/193&oldid=856041" இலிருந்து மீள்விக்கப்பட்டது