பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) i51 னால்தான் மிகு புகழ் பெற்றதாக வரலாறு. அந்நாளில் (சம்பந்தர் அங்கிருந்தபோது) திருக்கோயிலருகிலுள்ள திருமடத்தில் அரவு தீண்டி இறந்து விடுகின்றான் யாரோ ஓர் இளைஞன். இந்நிலையில் அவனுடன் வந்த கன்னிப் பெண் அவனைத் தீண்டவும் மாட்டாதவளாய் அழுதரற்று கின்றாள். இவ்வழுகுரலைக் கேட்ட ஊரவர் சிலர் விடந் தீர்க்கும் மந்திரவல்லாரை அழைத்து வந்து மந்திரித்துப் பார்த்தும் விடம் இறங்கவில்லை. ஆகவே அத்தலத்து இறைவனை நினைந்து அரற்றுகின்றாள். - - இந்த அழுகையொலி வைகறைப் பொழுதில் மருகற் பெருமானைவழிபடவந்த பிள்ளையாரின் திருச் செவியில் அன்ைகின்றது. அவரும் அவள் தங்கியிருந்த திருமடத்தை அடைந்து அவளை நோக்கி, பெண்ணே, நீ அஞ்சற்க. நின் இடுக்கண் இதுவெனக் கூறுக" என்று பணிக் கின்றார். இவ்வாறுதல் மொழிகேட்ட அக் கன்னிப் பெண், பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து கண்ணிர் சொரிய தன் வரலாற்றைக் கூறுகின்றான்: அருளுடையீர், என் தந்தை தாமன் என்பவர் வைப்பூரைச் சேர்ந்தவர். இப்போது அரவு தீண்டி ஆருயிர் நீங்கிய இவர் எந்தையின் மருகர்; எந்தைக்கு என்னுடன் பெண்பிள்ளைகள் எழுவர்; அவர்களுள் மூத்தபெண்ணை இவருக்குத் தருவதாக உறுதி கூறிய எந்தையார் சொல் தவறி பொருள் நசையால் பிறர் ஒருவருக்கு மணம் முடித்தனர். என்னை யொழிந்த ஏனைய மகளிரும் இவ்வாறே ஒரொருவராகப் பிறருக்கே மணம் செய்யப்பெற்றனர். எந்தையை நம்பித் தளர்வுறும் இவருக்காகப் பரிவுற்ற நான் உறவினர் ஒருவரும் அறியாத படி இவருடன் இல்லத்தை விட்டு வெளியேறினேன். இவரும் இங்கு அரவு தீண்டியதால் இறந்தார். என் செய்வேன் பாவியேன்? துன்பத்திற்குத் துணையாவார் ஒரு வருமின்றித் தவிக்கின்றேன். இந்நிலையில் சுற்றத்தவர் போல் இங்குத் தோன்றி என்துயர் நீங்க அருள் செய்தீர்" என்று போற்றி நிற்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/194&oldid=856042" இலிருந்து மீள்விக்கப்பட்டது