பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ho ஞானசம்பந்தர் இத்துயரச் செய்தியைக் கேட்டு நெஞ்சங்கலங்கிய காழிப்பிள்ளையார், அஞ்சற்க. உனக்கு எல்லாம் நன்மை யாகவே முடியும் என்று சொல்லி, திருமருகலில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பணிந்து சடையாய் எனுமால்' (2.18),என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகம் பாடி இறைவனை வழிபடுகின்றார். சடையாய் எனுமால், சரண் எனுமால்; விடையாய் எனுமால், வெருவா விழுமால் மடையார் குவனை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே. (1) என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். பெருமானே, இந்த ஒள்ளிழையாள் உளம் மலிந்து வருந்துதல் அருட் கடலாகிய தினது திருவுள்ளத்திற்குத் தகுவதாமோ?" என முறையிடுகின்றார். இன்னொரு பாடல் (7) இது: வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவாள் இவளைத் துயராக் கினையே. இதில் இக்கன்னிப் பெண்ணின் நிலையை எடுத்துக் கூறுகின்றார். - இந்திலையில் அரவு தீண்டப் பெற்ற இளைஞன் விடந் தீர்ந்து உயிர் பெற்றெழுகின்றான். இதனைக் காணும் அடியார் கூட்டம் வாழ்த்துகின்றது. கன்னியும் இளைஞனும் பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து பணி கின்றனர். புகலிப் பெருமானும் அவர்கட்கு மணம் புணரும் பெருவாழ்வை வகுத்தருளிப் பெருமை அடைகின்றார். இத்திருப்பதிகமும் அகத்துறையில் அமைந்துள்ளது. மருகற் பெ ரு மா ைன க் காதலித்த மங்கையொருத்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/195&oldid=856043" இலிருந்து மீள்விக்கப்பட்டது