பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 153 ஆற்றாமை கூறிச் செவிலி இரங்குதல் என்னும் துறையில் அமைந்துள்ளது. அருளாசிரியர்களின் அருளிச் செயல்கள் யாவும் மந்திரங்களாதலின், வணிக இளைஞன் உயிர் பெற்றெழுகின்றான் என்று கொள்வது ஏற்புடைத்து. திருமருகலில் பிள்ளையார் தங்கியிருக்கும் பொழுது சிறுத்தொண்ட நாயனார் அங்கு வந்து திருச் செங்காட்டங் குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றார். பிள்ளையாரும் மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் செல்லுகின்றார். அப்பொழுது, செங்காட்டங்குடியில் கணபதிச் சரத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தை மருகற் பெருமான் பிள்ளையாருக்குக் காட்டியருளு கின்றார். அது கண்ட பிள்ளையார் . அங்கமும் வேதமும்’ (1.6) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை புனைந்து மருகற் பெருமானை வழுத்துகின்றார். பாடல்முழவும் விழவுமோவாப் பன்மறையோர் அவர்தாம்பரவ மாடகெடுங்கொடி விண்தடவு மருகல்கிலாவிய மைந்தசொல்லாய் : சேடகமாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங்குடியதனுள் காடகமேயிட மாகஆடுங் - கணபதி யீச்சரங் காமுறவே. (5) என்பது இத்திருமாலையில் தமிழ் மணம் கமழும் ஐந்தாவது வாடா நறுமலர். பின்னர், தம்மை வரவேற்க வந்த சிறுத்தொண்ட நாயனாருடன் செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுகின்றார் பிள்ளையார். இந்த முறையில் பிள்ளையார் செங்காட்டங் குடிப் பெருமானை கறை கொண்ட மலர் (1-61) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிச் சேவிக் கின்றார், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/196&oldid=856044" இலிருந்து மீள்விக்கப்பட்டது