பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ஞானசம்பந்தர் நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான் தண்ணியான் வெய்யானந் தலைமேலான் மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான் செஞ்சடைமதியக் கண்ணியான் கண்ணுதலான் . . . . . . கணபதிச் சரத்தானே. : (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடல். இத்திருத் தலத்தில் சில நாட்கள் தங்கியிருக்கின்றார். . . - பின்னர்த் திருப்புகலூர் செல்லத் திருவுள்ளங் கொள்ளுகின்றார். செங்காட்டங்குடி ஈசனிடமும் சிறுத் தொண்ட நாயனாரிடமும் விடைபெற்றுக்கொண்டு புகலூர் நோக்கி வரும்போது இராமனதீச்சரம்' என்ற திருத்தலத்தை வழிபடுகின்றார். ‘சங்கொளிர் முன்கையர்' (1.115) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடித் தலத்திறைவனைப் பணிகின்றார். - சரிகுழல் இலங்கிய தையல் காணும் பெரியவன் காளிதன் பெரிய கூத்தை அரியவன் ஆடலோன் அங்கை பேந்தும் எரியவன் இராம ன தீச் சரமே. - (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது திருப்பாடல். 49. இராமன தீச்சரம் : நன்னிலத்திலிருந்து 5, கல் .ெ த ைல வு. திருப்புகலூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து திருக்கண்ணபுரம் என்ற திருமால் தலம் போகும் வழியில் உள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - 50. நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து" - (ஞானசம்பந்தர் 488)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/197&oldid=856045" இலிருந்து மீள்விக்கப்பட்டது