பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (2) 155. இராமன தீச்சரத்துப் பெருமானிடம் விடைப் பெற்றுக் கொண்டு புகலூர் எல்லையை வந்தடைகின்றார். பிள்ளையார் வருகையைக் கேள்வியுற்ற முருக நாயனார் அடியார்களுடன் ஊருக்குப் புறம்பே சென்று சண்பை வ்ேந்தரை வரவேற்கின்றார். திருப்புகலூரை அடைந்த பிள்ளையார் திருக்கோயிலில் புகுந்து வெங்கள் விம்மு' (2.115) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை பாடித் திருப்புகலூர் இறைவனை வழிபடுகின்றார். இப் பாமாலையில், வாழ்ந்தகாளும் இனிவாழும் நாளும் இவையறிதிரேல் வீழ்ந்தநாள்ளம் பெருமானை யேத்தாவிதி யில்லிர்காள் போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன் புகலூரையே சூழ்ந்தஉள்ளம் உடையீர்கள் . உங்கள்துயர் தீருமே. (2): என்பது தமிழ் மணம் கமழும் இரண்டாவது வாடா நறுமலர். பின்னர் முருக நாயனார் திருமடத்தில் அமர்ந்தருளுகின்றார். இந்த நாளில்தான் திருவாரூரிலிருந்து நாவுக்கரசர் பெருமான் திருப்புகலூருக்கு எழுந்தருளுகின்றார். இதற்கு மேல் நடைபெறும் நிகழ்ச்சிகளை அடுத்துக் காண்போம். என்ற தொடரால் வழியிலுள்ள இராமன தீச்சரம் வழி பட்டதாகக் கொள்ளப் பெற்றது. சேக்கிழார் குறிப்பிடாத தலங்களையெல்லாம் இப்படித்தான் கொள்ளவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/198&oldid=856046" இலிருந்து மீள்விக்கப்பட்டது