பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அப்பர் பெருமானுடன் தலவழிபாடு காழிப்பிள்ளையார் தமது சோழ நாட்டுத் திருத்தலப் பயணத்தை ஒரு நிலையில் ஒருவாறு முடித்துக்கொண்டு திருப்புகலூரை அடைகின்றார். இத்தலத்து எம்பெருமானை நெக்குருகு சிந்தையுடன் நேர் நின்று துதித்தருளி முருக நாயனார் திருமடத்தில் அமர்கின்றார். அங்கு அமர்ந் திருக்கும் நாளில் புகலூர் வர்த்தமாணிச்சரத் திருக் கோயிலை வழிபட்டு பட்டம் பால்கிற மதியம் (2.92) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடுகின்றார். இப்பதிகத்தில், 1. புகலூர் (திருப்புகலூர்): நன்னிலத்திலிருந்து 4 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. கோயிலைச் சுற்றி நாற்புறமும் திருக்குளம் அகழ்போலுள்ளது. கோயிலுக்குப் போக மட்டும் ஒரு வழி உண்டு. சுந்தரர் தலையணையாக வைத்துறங்கிய செங்கற்களை பொன்னாக்கி அவருக்களித்த அற்புதத் தலம். அப்பர் சுவாமிகள் முத்தியடைந்த தலம். இறைவன் சிறிது சாய்ந்துள்ளபடியால் கோணப்பிரான் (அப்பர் 4.105:10) என்று கூறப்பெறுகின்றார். அவருக்குச் சித்திரைச் சதயத்தை முடிவாகக் கொண்ட 10 நாள் விழாவில் சூலைநோய் நீங்கியது முதல் முத்தி அடைந்த வரை வரலாற்றுப் பகுதிகள் காட்டப் பெறுகின்றன. 2. புகலூர் வர்த்தமானிச்சரம் : இது கோணப்பிரான் சந்நிதிக்குச் சற்று வடக்குப் பக்கத்தில் உள்ளது. முருக நாயனார் திருவுருவம் இங்குள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/199&oldid=856047" இலிருந்து மீள்விக்கப்பட்டது