பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிமிழலைச் சிறப்பு நிகழ்ச்சிகள் 191 எனவரும் தொடரால் மானும் மழுவும் கைகொள்ளாது விற்றிருந்தருளும் தோணியப்பரின் திருவுருவத்தை விழி மிழலையில் கண்ட அற்புத நிகழ்ச்சியை நாமும் மனத் திரையில் கண்டு மகிழ்கின்றோம். ஞானக்கன்று வாழ்ந்த காலத்தில் அவரோடிருந்து இக்காட்சியைக் காணும் உணர் வினைப் பெற்று மகிழ்கின்றோம். இப்பதிகம் பன்முறை படித்து அநுபவிக்கக் கூடியது. வாசிதீரக் காசுபெறுதல் : தம்மைக் காண வந்த காழி மறையவர்களிடம் தாம் தோணிபுரத்துப் பெருமானை மிழலையில் கண்ட செய்தியைக் கூறி அவர்களைச் சிரபுர மாநகர் திரும்புமாறு பணித்து அரசருடன் வீழிமிழலையில் தங்கியிருக்கின்றார். நாடோறும் பிள்ளையாரும் அரசும் திருவிழிமிழலை மேவிய செல்வம் பாதம் தொண்டர் களுடன் பரவும் நியதியை மேற் கொண்டிருக்கின்றார்; இக் காலத்தில் பல திருப்பதிகங்களைப் பாடி மிழலை மேவிய பெருமானைப் போற்றுகின்றார். இங்ங்ணம் பாடியருளிய வற்றில் இரண்டு பதிகங்களைக் காண்போம். தேடகிலவிய (1.2) என்ற முதற்குறிப்புடைய சந்தத் திருப்பதிகம் ஒன்று. இதில், - - அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியினை இருவர்கள் பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி மணிபொரு வருமர கதகில மலியுன லணைதரு வயலணி திணிபொழில் தருமண மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே. (5) என்பது ஐந்தாவது திருப்பாடல். அடுத்தபதிகம் இரும்பொன்" (1.82) என்ற முதற்குறிப்பினையுடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/232&oldid=856107" இலிருந்து மீள்விக்கப்பட்டது